பெண்களுக்கு அது ஈஸி; ஆண்களை நினைச்சாதான் பாவமா இருக்கு - நித்யா மேனன் ஓபன்டாக்!

Nithya Menen Tamil Cinema
By Sumathi Feb 21, 2024 05:30 PM GMT
Report

நடிகை நித்யா மேனன் பெண்கள் குறித்து பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நித்யா மேனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து, கன்னடம் மற்றும் மலையாள சினிமாக்களில் கலக்கி வருகிறார்.

actress-nithya-menen

இறுதியாக இவர் நடித்த சைக்கோ மற்றும் திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், பெண்களுக்கு அழுகை ஒரு நிச்சயமான பலமான ஒரு ஆயுதமாக இருக்கும்.

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட தமிழ் நடிகர் - வெளுத்து வாங்கிய நித்யா மேனன்!

அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட தமிழ் நடிகர் - வெளுத்து வாங்கிய நித்யா மேனன்!

வைரல் பேச்சு

ஆனால் ஆண்களை நினைத்தால் தான் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மிக எளிதில் அழ மாட்டார்கள். சிறு வயது முதற்கொண்டே ஆண்கள் என்றால் அழக்கூடாது என்று சொல்லிச், சொல்லி வளர்த்ததால் தான் இந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு அது ஈஸி; ஆண்களை நினைச்சாதான் பாவமா இருக்கு - நித்யா மேனன் ஓபன்டாக்! | Actress Nithya Menen About Female Crying

பொதுவாக அழுவது என்பது உண்மையில் மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. மனதில் இருக்கும் பாரத்தை எல்லாம் அழுது இறக்கி வைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் வலிகள் குறையும். உங்கள் பாரத்தை அழுது முடித்து இறக்கி விட்டால் அடுத்த வேலையை நோக்கி நீங்கள் நகர்ந்து சென்று விடலாம்.

எனவே பெண்களை பொருத்த வரை அழுவது என்பது மிக ஈஸியான விஷயம். எனினும் ஆண்கள் நினைத்தாலும் இதை பண்ண முடியாது என்பதால் எனக்கு மிகவும் அவர்களை நினைத்தால் பாவமாக உள்ளது எனப் பேசியுள்ளார்.