கமல் கேட்டுட்டு தான் தொடுவார்; ஆனால், நீங்க - கணவனிடம் கறார் காட்டிய நடிகை நிரோஷா!
நிரோஷா-ராம்கி தம்பதி குறித்த தகவல் பேசப்பட்டு வருகிறது.
நிரோஷா
நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகளான நிரோஷா மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். கமல்ஹாசனுடன் சூரசம்ஹாரம் என்ற படத்தில் நடித்திருந்தார். பிரபு, கார்த்தி, ராம்கி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தொடர்ந்து, நடிகர் ராம்கியை திருமணம் செய்து கொண்ட நிரோஷா காமெடி நடிகையாக சில படங்களில் நடித்து வந்த நிலையில், சின்னத்திரை தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
காதல் வாழ்க்கை
முன்னதாக, 80களில் ராம்கி-நிரோஷா ஜோடி காம்பினேஷன் சினிமாவில் நன்கு ஒர்க்அவுட் ஆனது. நடிக்கும் போது ராம்கி தன்னை தொடும் போதெல்லாம், கமல் சார் கூட, என்னை தொடும் போது அனுமதி கேட்டு தான் தொடுவார்.
நீங்க அனுமதி கேட்க மாட்டீங்களா? என்று கறாராக கூறியுள்ளார் நிரோஷா. செந்தூரப்பூவே சூட்டிங்கில் இரு விபத்துகளில் நிரோஷா சிக்கியுள்ளார். அப்போது அவரை காப்பாற்றிச் சென்ற ராம்கி, கவலைப்பாடதே நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அப்படி தான் நண்பர்கள் காதலர்களாகி, தம்பதி ஆகியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள நிரோஷா ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்தில் நடித்துள்ளார்.