முத்தக்காட்சியே வேண்டாம்... - கமல்ஹாசனை டென்ஷனாக்கி பிரபல நடிகை…!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராகவும், உலக நாயகனாகவும் வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
கமல்ஹாசனை டென்ஷனாக்கி பிரபல நடிகை
1988ம் ஆண்டு கமல்ஹாசன், நிரோஷா நடிப்பில் வெளியான படம் “சூரசம்ஹாரம்”. இப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்து இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு முத்தக்காட்சியை படமாக்குவதற்காக நிரோஷாவிடம் அனுமதி கேட்டார் சித்ரா லட்சுமணன்.
முதலில் நிரோஷாவும் முத்தக்காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால், அதற்கு அடுத்த நாள் அந்த முத்தக்காட்சியை படமாக்கத் தொடங்கினார்கள் படக்குழுவினர். படிக்கட்டுகளில் கமல்ஹாசனும் நிரோஷாவும் ஏறியவுடன் இருவரும் முத்தம் கொடுப்பதுபோல் படப்பிடிப்பு தயாரானது.
இதனையடுத்து படப்பிடிப்பில் இருவரும் படிக்கட்டுகளில் ஏறினார்கள். ஆனால், கமல்ஹசான் படப்பிடிப்பில் முத்தம் கொடுக்கப்போகும்போது நிரோஷா “இந்த காட்சியில் நடிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டாராம். முந்தைய நாள் இக்காட்சியில் நடிப்பதாக ஒப்புதல் அளித்துவிட்டு திடீரென கடைசி நிமிடத்தில் முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறினால் எப்படி என்று சித்ரா லட்சுமணன் நிரோஷாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால் நிரோஷா ஏதோ ஒரு தயக்கத்தால் அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டார். இதனால் சித்ரா லட்சுமணனுக்கு நிரோஷா மீது மனக்கசப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 2, 3 நாட்கள் நிரோஷாவும் இயக்குனரும் பேசிக்கொள்ளவே இல்லையாம்.
இதனையடுத்து, ஒரு வழியாக சிறிது நாட்கள் பிறகு, அந்த முத்தக்காட்சியை படமாக்கலாம் என கூறினாராம் நிரோஷா. சித்ரா லட்சுமணனும் சரி என்று ஒப்புக்கொண்டாராம். ஆனால், கடைசியில் கமல்ஹாசன் எனக்கு அந்த முத்தக்காட்சி வேண்டாம் என்று கறாராக கூறிவிட்டாராம்.