விஜய் டிவி நடிகைக்கு நடந்த பாலியல் தொல்லை - உண்மை தெரிந்து கண்ணீர் விட்டு கதறல்
சீரியல் நடிகை தனக்கு சிறு வயதில் நடந்த மோசமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
நேஹா கௌடா
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் என்ற 2 சீரியல்களில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரை மக்களிடம் பிரபலமானவர் நடிகை நேஹா கௌடா.
தமிழில் மட்டுமின்றி கன்னடத்திலும் சில சீரியல்களில் நடித்துள்ள இவர், 2018 ஆம் ஆண்டு சந்தன் கௌடா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 6 வருடங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
மோசமான செயல்
குழந்தை பெற்றுக்கொண்ட பின் நடிப்பில் இருந்து விலகியுள்ள இவர், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு சிறு வயதில் நேர்ந்த கொடுமைகள் குறித்து பேசியுள்ளார்.
இதில் பேசிய அவர், "நான் 4வது படிக்கும்போது அந்த கொடூரமான சம்பவம் நடந்தது. ஒரு நாள் என்னுடைய அம்மா என்னை தூங்க வைத்துவிட்டு வெளியே சென்று விட்டார். வீட்டில் பாட்டி மட்டும் தான் இருந்தாங்க. நான் தூங்கி எழுந்ததும், அம்மாவை தேடி வீட்டை விட்டு வெளியே சென்றேன்.
அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் எனக்கு உன் அப்பாவை தெரியும், உனக்கு வாட்ச் வாங்கி தருகிறேன் வா என என்னை அழைத்தார். நானும் அவரை நம்பி சென்ற போது, என்னை ஒரு வாட்ச் கடைக்கு அழைத்து சென்று கதவை மூடி என்னிடம் மோசமாக நடக்க ஆரம்பித்தான்.
அப்பாவிடம் சொன்னேன்
நான் என்ன நடக்கிறது என தெரியாமல் அழுக ஆரம்பித்ததும் அழாதே என்னை கத்தியை காட்டி மிரட்டி என்னை அடித்தான். அதன் பின்னர் எப்படியோ நான் அவனிடமிருந்து தப்பித்து வெளியே வந்து விட்டேன். சில வருடம் கழித்து பள்ளியில் ஆசிரியர், குட் டச், பேட் டச் பத்தி சொல்லும் போதுதான், எனக்கு அப்போது நடந்த கொடுமை தெரிந்து, அழ ஆரம்பித்தேன்.
அந்த மோசமான சம்பவத்தை மறக்க முடியவில்லை. இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. அப்பாவிடம் இது குறித்து சொன்ன போது அவர் இந்த விசயத்தை நல்ல முறையில் கையாண்டு என்னை தைரியப்படுத்தினார்.
இதே போல் நிறைய சிறுமிகளுக்கு தற்போதும் மோசமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. சில குழந்தைகள் பயந்து வீட்டில் சொல்ல மாட்டார்கள். சில நேரங்களில் வீட்டில் சொன்னால் கூட எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர்களே அதை வெளியே சொல்லாமல் மூடி மறைந்து விடுவார்கள். இதனாலேயே எந்த பயமும் இல்லாமல், மேலும் பல குழந்தைகளுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்" என கூறினார்.