Tuesday, Jul 8, 2025

ஐஆர்எஸ் அதிகாரியுடன் டேட்டிங்கில் பிரபல தமிழ் நடிகை - ED விசாரணையில் அம்பலம்!

Kerala
By Sumathi 2 years ago
Report

அமலாக்கத்துறை விசாரணையில் ஐஆர்எஸ் அதிகாரியுடன் நடிகை நவ்யா டேட்டிங்கில் இருந்தது அம்பலமாகியுள்ளது.

நடிகை நவ்யா

மலையாளத்தில் வெளியான திலீப்பின் இஷ்டம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். தமிழில் பிரசன்னாவுடன் அழகிய தீயே, சேரனுடன் ராமன் தேடிய சீதை, ஆடும் கூத்து, ரசிக்கும் சீமானே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஐஆர்எஸ் அதிகாரியுடன் டேட்டிங்கில் பிரபல தமிழ் நடிகை - ED விசாரணையில் அம்பலம்! | Actress Navya Nair Dated An Irs Officer Ed Exposed

இந்நிலையில், இந்திய வருவாய்த்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 46 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

ED விசாரணை

அதன்பின் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணையில், வருவாய்த்துறை அதிகாரி சச்சின் சாவந்த் நடிகை நவ்யா நாயருடன் நெருங்கி பழகியது தெரியவந்துள்ளது. மேலும், 10 முறை கொச்சிக்கு சென்று நவ்யா நாயரை சந்தித்திருப்பதும், அவருக்கு நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்எஸ் அதிகாரியுடன் டேட்டிங்கில் பிரபல தமிழ் நடிகை - ED விசாரணையில் அம்பலம்! | Actress Navya Nair Dated An Irs Officer Ed Exposed

இதனால், நடிகையிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதில், ச்சின் சாவந் தனக்கு நண்பர் மட்டும்தான் என்றும் வேறு எந்த உறவும் தங்களுக்குள் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

அதனையடுத்து மற்றொரு பெண் நண்பரிடமும் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவருக்கு எதிரான வழக்கில் மும்பை PMLA நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.