பிரிந்தாலும் அவரை மறக்கமுடியாது, இன்னும் காதலுடன் தான் இருக்கிறேன் - மனம் உருகிய நடிகை!
பிரபல நடிகை தனது கணவரை பற்றி மனம் உருகி பேட்டியளித்துள்ளார்.
நடிகை நளினி
தமிழ் சினிமாவில் 80s காலகட்டத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை நளினி. இவர் நடித்துக் கொண்டிருந்தபொழுது ஒரு வருடத்தில் 24 படங்களெல்லாம் வெளியாகியுள்ளது. அந்த அளவிற்கு பிஸியான நடிகையாக இருந்தவர், இவர் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
பின்னர் 1987-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளன. இவர்கள் 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர், பின்னர் ஒரு சில காரணங்களால் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
மனம் உருகி பேட்டி
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் என்கிற ஷோவில் கலந்துகொண்டு இவரது காதல் கதை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் தான் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவர், "ராமராஜன் அவர் நல்ல உழைப்பாளி, பாவம் தெரியாம என்னை லவ் பண்ணிவிட்டார்.
அதனால் நாங்க கல்யாணம் பண்ணவேண்டியது ஆகிடுச்சு. எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகல அதனால பிரிஞ்சிட்டோம். ஆனால் இன்னும் அவரை நான் காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன். அது அவருக்கும் தெரியும்” என்று தனது காதல் பற்றி ஏக்கத்துடன் மனம் திறந்து பேசியுள்ளார். விவாகரத்து ஆனாலும் விட்டுக்கொடுக்காமல் அவர் பேசியதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.