பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணவரை பற்றி பேசாத பிரியங்கா - ஏன் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கணவர் பற்றி பேசாதது குறித்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரியங்கா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்த VJ பிரியங்கா தனக்கே உரிய கலகலப்பான பாணியில் நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் நிகழ்ச்சிகளை எடுத்துச் செல்லும் பிரியங்கா ரசிகர்களை கைதேர்ந்தவர்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகிய உடனேயே ரசிகர்கள், அப்படியானால் பிக்பாஸ் நிகழ்ச்சி, களை கட்டப் போகிறது. எப்போதும் கலகலவென பேசி சிரிக்கும் பிரியங்கா பிக்பாஸில் இருந்தால் நாட்கள் போவதே தெரியாது என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
அவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரிடத்திலும் பழகினார். பேசினார். சிரித்தார். கோபப்பட்டார். அழுதார். இந்த எல்லா உணர்வுகளையும் அளவில்லாமல் வெளிப்படுத்தி, அனைவரின் அன்பையும் பெற்றவராக பிக்பாஸால் வாழ்த்தப்பட்டார்.
கடைசியாக பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களுடன் தம்முடைய சமூக வலைதளங்கள் மூலம் நேரலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பிரியங்கா. அவரிடம் ரசிகர்கள் பலரும், “நீங்கள் எங்களுடைய இதயத்தை வென்றீர்கள், அன்பை பெற்றீர்கள். நீங்கள் ஒரு தூய அன்புள்ளம் கொண்டவர். அத்துடன் ஏன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுடைய கணவர் பற்றி எதுவுமே சொல்லவில்லை?” என்று கேட்டுள்ளனர்.
அதற்கு பர்சனல் கேள்விகள் நிறையவே கேட்கிறீர்கள். ஆனால் அவற்றைப் பற்றி இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது, கூடிய விரைவில் அதற்கான பதிலை நான் சொல்கிறேன்! என்று தெரிவித்துள்ளார். மேலும் பலருக்கும் அன்பைக் கொடுத்து நான் தோற்றுப் போயிருக்கிறேன், காயம் பட்டிருக்கிறேன், எனினும் அன்பு வைப்பதை தாண்டி, என் மீது நான் வைத்திருக்கும் அன்பு தான் என்னை இன்னும் வலிமை மிக்க ஒருவராக மாற்றியது. நம்மை நாம் மிகவும் நேசிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

Mango rasam: நாவூறும் சுவையில் மாங்காய் ரசம்- வீட்டிலேயே செய்வது எப்படி? குழந்தைகளின் Favorite Manithan
