இதுதான் எல்லாத்துக்கும் காரணம்; ராமராஜனை பிரிந்தேன் - நளினி ஓபன்டாக்!

Ramarajan Tamil Cinema
By Sumathi May 25, 2024 05:30 PM GMT
Report

ராமராஜனை பிரிந்தது குறித்து நளினி மனம் திறந்துள்ளார்.

நடிகை நளினி

தமிழ் சினிமாவில் 80களில் பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. பல படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ramarajan family

பிறகு திரைத்துறையை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் ராமராஜனை பிரிந்த பிறகு நடிக்க தொடங்கி இருக்கிறார். இவருக்கு சின்ன திரையிலும் அதிகமான ரசிகர்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றனர்.

கைவிட்ட ராமராஜன்.. அப்பாவும், அண்ணனும் அப்படி பண்ணீட்டாங்க - நடிகை நளினி வேதனை

கைவிட்ட ராமராஜன்.. அப்பாவும், அண்ணனும் அப்படி பண்ணீட்டாங்க - நடிகை நளினி வேதனை

திருமண வாழ்க்கை

தற்போது, "மோதலும் காதலும்" சீரியலில் கலக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் "எத்தனை ஜென்மங்கள் நான் எடுத்தாலும் அவர்தான் (ராமராஜன்) எனக்கு கணவராக வேண்டும். நானும் அவரும் தற்போதுகூட நன்றாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இதுதான் எல்லாத்துக்கும் காரணம்; ராமராஜனை பிரிந்தேன் - நளினி ஓபன்டாக்! | Actress Nalini About Separation To Ramarajan

எங்களுக்கு நேரம் சரியில்லை. நாங்கள் பிரிந்திருந்தால் நல்லது. பிள்ளைகள் தந்தையுடன் இருந்தால் நல்லது இல்லை என்ற ஜாதக ரீதியான காரணங்களால்தான் விவாகரத்து பெற்றோம். அவருக்கு ஜாதகத்தின் மீது பெரிய நம்பிக்கை" எனத் தெரிவித்துள்ளார்.