உடை மற்றும்போது 5 பேர்.. சுற்றி கண்ணாடி மட்டும் தான் இருந்தது - நடிகை நக்ஷத்ரா வெளிப்படை!
ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து நடிகை வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை நக்ஷத்ரா
தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர், நக்ஷத்ரா நாகேஷ். இவர் சன் டிவி, விஜய் டிவி போன்ற பல நிகழ்ச்சிகளை தனோகுதி வழங்கியுள்ளார். இவர் நடிகர் ஆர்யா நடித்த 'சேட்டை' படத்தில் காயத்ரியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர்.
இவர் பல குறும்படங்களில் நடித்துள்ளார், பின்னர் பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நாடகமான தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், :"என்னை வேனில் போய் உடை மாற்றச் சொன்னார்கள். வேனில் ஜன்னல்கள் இல்லை, கண்ணாடி மட்டும் தான் இருந்ததி. ஐந்து பேர் வேனின் வெளியே அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நான் உடை மாற்ற போகிறேன் என தெரியும். தெரிந்தும் நகர்ந்து செல்லவில்லை. அவர்கள் நான் உடை மாற்றுவதைப் பார்க்க அமர்ந்து இருந்தார்கள் போல. எனக்கு வேறு இல்லை.
அந்த சூழ்நிலையில் என்னை மறைக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். பக்கத்தில் இருந்த வீட்டின் கதவை தட்டி அவர்களிடம் நடந்ததை சொல்லி உடை மாற்றினேன்" என்று கூறியுள்ளார்.