கல்யாணம் எப்போ? குழந்தை பெத்துக்க ஆசைதான்.. நடிகை நக்மா ஓபன்டாக்!
தனது பர்சனம் பக்கம் குறித்து நடிகை நக்மா மனம் திறந்துள்ளார்.
நடிகை நக்மா
90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நக்மா தொடர்ந்து பாட்ஷா, வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பிஸ்தா போன்ற பிளாக்பாஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி என பல மொழி படங்களில் நடித்துள்ள நக்மா பின்னர் கடைசியாக நடிகர் அஜித்தின் சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திருமணம்?
48 வயதாகும் நிலையில், தற்போதும் திருமணமாகாமல் வாழ்த்து வருகின்றார். இந்நிலையில் இதுகுறித்து முன்னதாக நக்மா அளித்த பேட்டி ஒன்றில்,
“திருமணம் செஞ்சுக்கக் கூடாதுங்கிற எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. கல்யாணம், குழந்தைகள்னு குடும்ப வாழ்க்கையை அமைச்சுக்கணும்னுதான் நினைக்கிறேன்.
சில சமயங்கள்ல நமக்கும் ஒரு துணை, குடும்பம் வேணும்னு உணர்கிறேன். அது ஏனோ இப்ப வரை கைகூடல“ என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.