அன்று விஜய்க்கு ஹீரோயின்.. இன்று சீரியல் நடிகை - இவர் யாருனு தெரியுதா?

Vijay Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jul 08, 2024 11:48 AM GMT
Report

விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை மோனிகா காஸ்டெலினோ தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். 

மோனிகா காஸ்டெலினோ

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மின்சார கண்ணா. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.

அன்று விஜய்க்கு ஹீரோயின்.. இன்று சீரியல் நடிகை - இவர் யாருனு தெரியுதா? | Actress Monica Castelino Who Acted With Vijay

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை மோனிகா காஸ்டெலினோ. அந்த படத்தில் விஜய்யுடன் இவர் டூயட் போட்ட 'உன்பேர் சொல்ல ஆசை தான்' என்ற பாடல் மிகவும் பிரபலம்.

மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மீண்டும் இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சீரியல்கள் 

கோலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்த மோனிகா, அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்தும் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இதனையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு முதல் அவர் இந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.

அன்று விஜய்க்கு ஹீரோயின்.. இன்று சீரியல் நடிகை - இவர் யாருனு தெரியுதா? | Actress Monica Castelino Who Acted With Vijay

இதனிடையே சத்யபிரகாஷ் சிங் என்ற துணை இயக்குநரை மோனிகா திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான ஓராண்டுக்குள் இருவரும் பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மின்சாரா கண்ணா படத்தில் மட்டுமே மோனிகா காஸ்டெலினோ நடித்திருந்தாலும், அவருக்கு அப்போது ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.