'குட் நைட்' பட நடிகை மீதா ரகுநாத்துக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா..?

Tamil Cinema Marriage Tamil Actors Tamil Actress Meetha Raghunath
By Jiyath Mar 18, 2024 04:56 AM GMT
Report

நடிகை மீதா ரகுநாத்தின் திருமணம் இரு வீட்டார் முன்னிலையில் கோலாகமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மீதா ரகுநாத்

'முதல் நீ முடிவும் நீ' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீதா ரகுநாத். அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர், நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக 'குட் நைட்' படத்தில் நடித்தார்.

இந்த படம் பெரும் வெற்றி பெற்றது. மேலும், இப்படத்தில் 'அனு' என்ற கதாபாத்திரத்தில் நடித்த மீதாவின் இயல்பான நடிப்பு பலரையும் வெகுவாக ரசிக்க வைத்தது. இவரது நடிப்பை பார்த்துவிட்டு, இவரைப் போல தனக்கு மனைவி வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசும் அளவிற்கு

வீட்டுக்குள் அர்ச்சனா செய்த செயல்.. வெளிய கூட்டிட்டு வர நெனச்சேன் - அப்பா வேதனை!

வீட்டுக்குள் அர்ச்சனா செய்த செயல்.. வெளிய கூட்டிட்டு வர நெனச்சேன் - அப்பா வேதனை!

திருமணம் 

மீதாவின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு மீதா ரகுநாத்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிச்சயதார்த்தம் அவரின் சொந்த ஊரான ஊட்டியில் நடைபெற்றது.

இந்நிலையில் மீதா ரகுநாத்தின் திருமணம் இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலாகமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதா ரகுநாத்தை திருமணம் செய்து கொண்டவர், அவரது நீண்ட நாள் நண்பர் என்றும், கடந்த சில வருடங்களாக இவர்கள் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.