Monday, May 5, 2025

வீட்டுக்குள் அர்ச்சனா செய்த செயல்.. வெளிய கூட்டிட்டு வர நெனச்சேன் - அப்பா வேதனை!

Archana Tamil Cinema Bigg Boss Tamil TV Shows Tamil Actress
By Jiyath a year ago
Report

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா குறித்து அவரின் தந்தை பேசியுள்ளார்.

நடிகை அர்ச்சனா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த நடிகை அர்ச்சனா, டைட்டில் வின்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வீட்டுக்குள் அர்ச்சனா செய்த செயல்.. வெளிய கூட்டிட்டு வர நெனச்சேன் - அப்பா வேதனை! | Bigg Boss Archana Father About Her Behaviour

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அர்ச்சனாவின் அப்பா "முதல் நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா அழும்போது என்னால் தாங்க முடியவில்லை. உடனே பிக் பாஸ் நிகழ்ச்சியின் தலைவரிடம் சென்று என்னுடைய மகளை தயவு செய்து வெளியே அனுப்பி விடுங்கள் என்று சொல்ல நினைத்தேன்.

பெருமையாக இருந்தது

ஆனாலும் வீட்டில் எல்லோரும் இன்னும் ஒரு சில நாள் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் அர்ச்சனா அடுத்த சில நாளில் உள்ளே நடந்த பிரச்சனைகளுக்கு சரியான பதிலடி கொடுத்திருந்தார்.

வீட்டுக்குள் அர்ச்சனா செய்த செயல்.. வெளிய கூட்டிட்டு வர நெனச்சேன் - அப்பா வேதனை! | Bigg Boss Archana Father About Her Behaviour

அதோடு தைரியமாக அவர் பேசிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து எனக்கு பெருமையாக இருந்தது. அதோடு அங்கு ஒரு இடத்தில் கூட அர்ச்சனா தவறான வார்த்தையை பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளார்.