மீரா ஜாஸ்மின் வீட்டில் சோகம்; இனி.. சந்திக்கும் வரை - கண்ணீரோடு நடிகை!

Meera Jasmine Tamil Cinema
By Sumathi Apr 05, 2024 10:33 AM GMT
Report

நடிகை மீரா ஜாஸ்மின் தந்தை காலமானார்.

நடிகை மீரா ஜாஸ்மின் 

பிரபல மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகு சுந்தரம், மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

meera jasmine

திருமணம் ஆன 2 ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்தார். தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி சில இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளருடன் தொடர்பு; கணவரால் பாதிப்பு - வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்!

இசையமைப்பாளருடன் தொடர்பு; கணவரால் பாதிப்பு - வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்!

தந்தை மறைவு

இந்நிலையில், மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் பிலிப் (83) உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், காலமானார். தந்தையின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘இனிமேல் நாம் மீண்டும் சந்திக்கும் வரை’ என உருகியுள்ளார்.

இவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் நடிகை மீரா ஜாஸ்மினுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழில் விரைவில் வெளிவர இருக்கும் ‘டெஸ்ட்’ என்ற படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார்.