பிரபல இயக்குநருடன் டேட்டிங்கில் மீரா ஜாஸ்மின் - கசிந்த தகவல்!
பிரபல நடிககையான மீரா ஜாஸ்மின் பிரபல இயக்குநர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சையில் மீரா ஜாஸ்மின்:
பிரபல மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகு சுந்தரம், மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் திலீப்பின் படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் மலையாள சினிமாவில் நடிக்க மீரா ஜாஸ்மினுக்கு சில காலம் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் தடை பற்றியெல்லாம் தனக்கு தெரியவே தெரியாது, மலையாள படங்களில் நடித்து கொண்டுதான் இருக்கிறேன் என அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
காதல் உறவு:
திருமணம் ஆன 2 ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்தார் நடிகை மீரா ஜாஸ்மின். மேலும் கணவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல் பரவியது. மேண்டலின் ராஜேஷுடன் காதல் உறவில் இருந்தார் மீரா ஜாஸ்மின். அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அறிவித்தார். ஆனால் அந்த காதல் திருமணத்திற்கு முன்பே தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து துபாயில் செட்டிலான மீரா ஜாஸ்மின் சமீபத்தில் இயக்குநர் அருண் கோபியுடன் காதல் உறவில் இருப்பதாகவும், விரைவில்
திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.