இசையமைப்பாளருடன் தொடர்பு; கணவரால் பாதிப்பு - வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்!
மீரா ஜாஸ்மின் குறித்து செய்யாறு பாலு தகவல்கள் பகிர்ந்துள்ளார்.
மீரா ஜாஸ்மின்
பிரபல மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் தமிழில் ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி, மெர்குரி பூக்கள், பரட்டை என்கிற அழகு சுந்தரம், மம்பட்டியான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் ஆன 2 ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்தார். தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி சில இயக்குநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
விவாகரத்து
இந்நிலையில், பத்திரிகையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டி ஒன்றில், திருமணம் செய்வதற்கு முன்பே, இசைக்கலைஞர் ஒருவருடன் மீரா ஜாஸ்மினுக்கு காதல் ஏற்பட்டது. அவரது இசையில் மயங்கி மனதை பறிகொடுத்து விட்டார்.

ஆனால் இருவருக்கும் ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு தான் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். அதனால்தான் அவரது சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இசையமைப்பாளருடன் தொடர்பு, குடும்ப வாழ்க்கையில் கணவரை பிரிந்த பாதிப்பால் வாழ்க்கையை தொலைத்தார் எனத் தெரிவித்துள்ளார்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan