அந்த நடிகருடன் இரண்டாவது திருமணம்? உண்மையை உடைத்த நடிகை மீனா!

Meena Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Mar 25, 2024 04:05 PM GMT
Report

தனது இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனா பேசியுள்ளார். 

நடிகை மீனா

90ஸ்-களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1990-ல் ஒரு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

அந்த நடிகருடன் இரண்டாவது திருமணம்? உண்மையை உடைத்த நடிகை மீனா! | Actress Meena Talks About Her Second Marriage

தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2009-ம் ஆண்டு மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவரின் கணவர் கடந்த 2022-ம் ஆண்டு நுரையீரல் நோய் காரணமாக மரணம் அடைந்தார். இதனையடுத்து நடிகை மீனா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி உள்ளார் என்று ஒரு நடிகருடன் இணைத்து தகவல்கள் பரவின.

திறந்தவெளியில் உடை மாற்றுவது கஷ்டம்... அந்த நேரத்தில் மணிவண்ணன் செய்த உதவி

திறந்தவெளியில் உடை மாற்றுவது கஷ்டம்... அந்த நேரத்தில் மணிவண்ணன் செய்த உதவி

திருமணமா?

இதற்கு அவர் பலமுறை பலமுறை விளக்கம் அளித்தும் வதந்திகள் ஓய்ந்தபாடு இல்லை. இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு மீனா கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அந்த நடிகருடன் இரண்டாவது திருமணம்? உண்மையை உடைத்த நடிகை மீனா! | Actress Meena Talks About Her Second Marriage

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொல்லுங்கள். அதுதான் நல்லது. நாட்டில் என்னைப்போல் தனிமையில் வாழும் பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பற்றி யோசியுங்கள்.

தற்போதைக்கு எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இல்லை. எதிர்கால முடிவு பற்றி இப்போது எப்படி சொல்ல முடியும். எனவே இரண்டாவது திருமணம் என்று வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டு கொள்ள வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.