தேவர்மகன் படம் குறித்து பேசிய மீனா

Meena Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jun 13, 2024 11:16 AM GMT
Report

தான் தவறவிட்ட படம் குறித்து நடிகை மீனா பேசியுள்ளார்.

நடிகை மீனா

90ஸ்-களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1990-ல் ஒரு புதிய கீதை என்ற தமிழ் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

தேவர்மகன் படம் குறித்து பேசிய மீனா | Actress Meena Talks About Devar Magan Movie

தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மீனா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தான் தவறவிட்ட படம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "தேவர் மகன் படத்தில் ரேவதி கேரக்டர் நான் பண்ண வேண்டியது. இத்தனைக்கும் முதல் நாள் ஷூட்டிங் போயிட்டு 2,3 மேக்-அப் எல்லாம் போட்டு பாத்தாங்க.

வாழ்க்கையை கெடுத்த கவுண்டமணி; அதெல்லாம் கூட செஞ்சுருக்காரு - விளாசிய நடிகை!

வாழ்க்கையை கெடுத்த கவுண்டமணி; அதெல்லாம் கூட செஞ்சுருக்காரு - விளாசிய நடிகை!

ஷூட்டிங் கேன்சல்

அப்பறம் யாருக்கும் படத்தில் மேக்-அப் இல்லன்னு சொல்லிட்டாங்க. அடுத்த நாள் ஷூட்டிங் போயிட்டு ஒரு சீன் கூட முடிச்சோம். அன்னைக்கு ராத்திரியே அவங்க அந்த சீனெல்லாம் போட்டு பாத்துருக்காங்க.. எப்படி வந்துருக்குனு.

தேவர்மகன் படம் குறித்து பேசிய மீனா | Actress Meena Talks About Devar Magan Movie

ஆனா.. கமல் சார் அவரோட கெட்டப்பில் திருப்தியா இல்ல. அந்த மீசை எல்லாம் பெருசா அவர் நெனச்ச அளவுக்கு வரல. அதனால 10 நாள் ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டாங்க. அந்த நேரத்துல டக்குனு 10 நாள் என்ன பண்றதுனே தெரியல. ஆனா.. நாங்கள் கொஞ்சம் இப்படி அப்படிலாம் அட்ஜஸ்ட் பண்ணோம்.

அப்பறம் திருப்பியும் அதே சீன ரீ-ஷூட் பண்ணோம். அதுக்கு அடுத்த நாள் மறுபடியும் ஷூட்டிங் கேன்சல்னு சொன்னாங்க. திருப்பியும் 10 நாள் வேஸ்ட்டா போச்சு. அப்பறம் அவங்க என்னோட டேட்ஸ் கேக்கும்போது என்னால் குடுக்க முடியல. அப்போ நான் ரொம்ப பிசியா இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.