இந்த விஷயத்த வெளிய சொல்லிடாத - நடிகை மீனாவை மிரட்டிய 67 வயது நடிகர்!

Meena Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Jul 01, 2024 05:21 PM GMT
Report

நடிகர் பிரபு தன்னை மிரட்டியது குறித்து நடிகை மீனா பேசியுள்ளார். 

நடிகை மீனா

90ஸ்-களில் பலரின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா.  இவர் 'ஒரு புதிய கீதை' என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார்.

இந்த விஷயத்த வெளிய சொல்லிடாத - நடிகை மீனாவை மிரட்டிய 67 வயது நடிகர்! | Actress Meena Talks About Actor Prabhu

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீனா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் நடிகர் பிரபு குறித்து பேசியுள்ளார்.

டேய் இவன் டா.. அடிக்க வந்த ரசிகர்கள்; அஜித் செய்த தரமான சம்பவம் - என்ன நடந்தது?

டேய் இவன் டா.. அடிக்க வந்த ரசிகர்கள்; அஜித் செய்த தரமான சம்பவம் - என்ன நடந்தது?

மிரட்டினார்

அவர் கூறுகையில் "ஒருமுறை பிரபுவுடன் நான் ஜோடியாக நடித்தபோது, அவருடன் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக நான் நடித்தது குறித்து கூறினேன். அவருக்கு பெரிய ஆச்சரியம். அப்போது அவர், 'இந்த விஷயத்தை மட்டும் நீ வெளியே சொன்னால் அவ்வளவுதான்' என்று மிரட்டினார்.

இந்த விஷயத்த வெளிய சொல்லிடாத - நடிகை மீனாவை மிரட்டிய 67 வயது நடிகர்! | Actress Meena Talks About Actor Prabhu

ஏனெனில் தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஹீரோயினாக நடிக்கிறார் என்று வெளியே தெரிந்தால், தனது வயது என்ன என்பது தெரிந்துவிடும் என்பதால் அவர் விளையாட்டாக மிரட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.