விவாகரத்து நடிகர் மீது விருப்பம்.. அவர் தான் வேணும் அம்மாவிடம் அடம்பிடித்த மீனா - ஓபன் டாக்!
அந்த நடிகர் மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்று நடிகை மீனா அம்மாவிடம் கேட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் கியூட் நடிகையான மீனா 90களில் பிரபல டாப் நடிகையாக வலம் வந்தார். இவர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் தொடர்ந்து, முத்து படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார், மேலும், இவர் வாய்ப்புகள் கிடைத்து பல டாப் நடிகர்களுடன் நடித்துள்ளார்.
பின்னர் டாப் நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது மகள் நைனிகா நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி என்ற படத்தில் நடித்துள்ளார், பின்னர் சமீபத்தில் இவர் தனது கணவரை இழந்துள்ளார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், அவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் உடன் இருக்கும் புகைப்படத்தை காண்பித்த பொழுது அவர் உணர்ச்சிவசத்தில் பேசினார்.
அதில், "எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், அந்த புகைப்படம் எடுத்த பொழுது என் இதயமே நொறுங்கிடுச்சு. ஏனென்றால் அவருக்கு அன்று திருமணம், அப்பொழுது எனக்கு திருமணம் ஆகவில்லை. என் அம்மாவிடம் ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்க அம்மா என்றேன்" என்று கூறியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.