நான் அதை செஞ்சதே இல்லை; ஆனால் அவர் ஆசையாய்.. முதல் முறை கணவர் குறித்து மனம் திறந்த மீனா!

Meena Tamil Cinema
By Sumathi Jun 22, 2024 09:15 AM GMT
Report

மறைந்த கணவர் குறித்து நடிகை மீனா மனம் திறந்துள்ளார்.

நடிகை மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

நான் அதை செஞ்சதே இல்லை; ஆனால் அவர் ஆசையாய்.. முதல் முறை கணவர் குறித்து மனம் திறந்த மீனா! | Actress Meena Open Talk About Husband

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

தனுஷ் - மீனா திருமணம்? விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் - விளாசிய பிரபலம்!

தனுஷ் - மீனா திருமணம்? விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் - விளாசிய பிரபலம்!

கணவர் சமையல்

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார்.

நான் அதை செஞ்சதே இல்லை; ஆனால் அவர் ஆசையாய்.. முதல் முறை கணவர் குறித்து மனம் திறந்த மீனா! | Actress Meena Open Talk About Husband

இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், என்னுடைய கணவர் வித்யாசாகர் இருந்த வரைக்கும் அழகாக சமையல் செய்வார். எனக்கு சமையல் செய்ய தெரியாது என்பதால் என்னையும் கூப்பிட்டு அடிக்கடி இதை கட் பண்ணி தான் அதை கட் பண்ணி தான் என்று சொல்லுவார்.

ஆனால் என்னால் சரியாக சமையல் செய்ய முடியாது அவருக்கு உதவும் போதும் சில முறை நான் சொதப்பி விடுவேன். அவருக்கு பிடித்த சாப்பாடு நான் செஞ்சு கொடுத்தது கிடையாது. ஆனால் அவர் தான் எங்களுக்காக பார்த்து பார்த்து சமையல் செய்து தருவார். அதுவும் ஸ்டீல் பிஷ் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை அவர் அழகாக செய்து தருவார் என உருக்கமாக பேசியுள்ளார்.