என் பொண்ணு இனி அந்த மாதிரி நடிக்கமாட்டா - படப்பிடிப்பில் கதறி அழுத மீனா அம்மா!

Meena
By Sumathi Jun 06, 2023 02:30 PM GMT
Report

படப்பிடிப்பில் நடிகையின் மீனா அம்மா கதறி அழுத ப்ளாஸ்பேக் சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

மீனா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. அதன்பின் விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என பலருடனும் நடித்து 90களில் முன்னணி நடிகையாக இருந்தார். ராஜ்கிரண் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் என் ராசாவின் மனசிலே.

என் பொண்ணு இனி அந்த மாதிரி நடிக்கமாட்டா - படப்பிடிப்பில் கதறி அழுத மீனா அம்மா! | Actress Meena Mother Cried In The Shooting Spot

இதனை இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில், ராஜ்கிரணின் மனைவியாக மீனா நடித்திருப்பார். அவர் இறந்துவிடுவார். மீனா உடலை தகனம் செய்யும் அந்த காட்சியை மிகவும் யாதார்த்தமாக உண்மை சம்பவம் போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

கதறி அழுத அம்மா

அப்போது படப்பிடிப்பில் இருந்த மீனாவின் அம்மா கதறி அழுதாராம். ‘என்னய்யா என் பொண்ண வச்சி இப்படியெல்லாம் எடுக்குறீங்க.. நான் ஒத்துக்க மாட்டேன்’ என படக்குழுவிடம் தகராறும் செய்துள்ளார்.

என் பொண்ணு இனி அந்த மாதிரி நடிக்கமாட்டா - படப்பிடிப்பில் கதறி அழுத மீனா அம்மா! | Actress Meena Mother Cried In The Shooting Spot

எனவே, அவரை ஒரு இடத்தில் தங்க வைத்து அவருக்கு தெரியாமல் அந்த காட்சியை படக்குழு எடுத்தார்களாம். அதன்பின் ‘என் பொண்ணு இனிமேல் இந்த மாதிரி காட்சியில் நடிக்கவே மாட்டா’ எனத் தெரிவித்துள்ளார்.