மத்திய அமைச்சராகும் மீனா? டெல்லியில் முக்கிய புள்ளியுடன் சந்திப்பு!

Meena Tamil Cinema Delhi
By Sumathi Jun 24, 2025 05:27 AM GMT
Report

மீனா விரைவில் மத்திய இணையமைச்சர் ஆக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மீனா 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. 45 ஆண்டுகளை கடந்து பயணித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம் என மிகவும் பிசியாக இருந்தார்.

actress meena

தொடர்ந்து வித்யாசாகர் என்பவரை 2009ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், 2022ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வித்தியாசாகர் உயிரிழந்தார்.

போதைப்பொருள் வழக்கு; மருத்துவ பரிசோதனை - நடிகர் ஸ்ரீகாந்த் கைது

போதைப்பொருள் வழக்கு; மருத்துவ பரிசோதனை - நடிகர் ஸ்ரீகாந்த் கைது

அரசியல் எண்ட்ரி?

அதன்பின் பெரிதும் வெளியில் வராத மீனா, தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் ஒருவரின் இல்லத்துக்கு மீனா சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அமைச்சராகும் மீனா? டெல்லியில் முக்கிய புள்ளியுடன் சந்திப்பு! | Actress Meena Meets Vice President Bjp Entry

மேலும், பாஜகவில் அவர் இணைய போவதாகவும் தகவல்கள் பரவியது. இந்த சமயத்தில் மீனா திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் பாஜக மூத்த தலைவர்கள் சிலரை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.