Saturday, Mar 29, 2025

எல்லாருக்கும் நான் வேணும்; ஆனா விஜய்யுடன் மட்டும் தான்.. நடிகை மீனா ஓபன் டாக்!

Vijay Meena Tamil Cinema Tamil Actress Actress
By Jiyath a year ago
Report

விஜய்யுடன் ஏன் நடிக்க முடியவில்லை என்பது குறித்து நடிகை மீனா பேசியுள்ளார்.

நடிகை மீனா

90ஸ்'களில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை மீனா. 1982ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சிவாஜி நடித்த நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் முதன் முறையாக நடித்தார். 1990ல் ஒரு புதிய கீதை என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

எல்லாருக்கும் நான் வேணும்; ஆனா விஜய்யுடன் மட்டும் தான்.. நடிகை மீனா ஓபன் டாக்! | Actress Meena About Why Could Not Act With Vijay

ரஜினி,கமல்,அஜித்,என அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். 

ஆனால் நடிகர் விஜய்யுடன் மட்டும் இவர் இனைந்து நடித்ததே இல்லை. ஷாஜகான் படத்தில் உள்ள ஒரு பாடலில் மட்டும் இணைந்து நடனமாடியிருப்பார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யுடன் ஏன் நடிக்க முடியவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.

Leo: லிப்லாக்க அவர் என்ஜாய் பண்ணாரு; முடித்துவிட்டு சொன்ன அந்த வார்த்தை - ஒளிப்பதிவாளர் பேட்டி!

Leo: லிப்லாக்க அவர் என்ஜாய் பண்ணாரு; முடித்துவிட்டு சொன்ன அந்த வார்த்தை - ஒளிப்பதிவாளர் பேட்டி!

தேதி பிரச்சனை

மீனா பேசியதாவது "விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் 3,4 படங்களில் என்னால் பண்ண முடியவில்லை. எல்லாம் தேதி பிரச்சனைதான். அஜித்தின் வாலி படமும் மிஸ் ஆகி விட்டது. எல்லாருக்கும் நான் வேணும், நான் பண்ணனும்னு இருக்கும்போது, ஒரு பக்கம் சந்தோஷமாக இருக்கும்.

எல்லாருக்கும் நான் வேணும்; ஆனா விஜய்யுடன் மட்டும் தான்.. நடிகை மீனா ஓபன் டாக்! | Actress Meena About Why Could Not Act With Vijay

ஆனால் எல்லாத்தையும் பண்ண முடியவில்லை . ஏனென்றால் நான் தென்னிந்தியாவில் எல்லா மொழிகளில் அப்போது நடித்துக்கொண்டிருந்தேன். அதனால் தேதி ஒதுக்குவது மிகவும் கடினமாக இருந்தது. அப்படி நான் விஜய்யுடன் நடிக்க முடியாமல் ஹிட் ஆன படங்களில் 'பிரண்ட்ஸ்' படமும் ஒன்று" என மீனா பேசியுள்ளார்.