2வது திருமணம் குறித்து பரவும் செய்திகள் - உறுதிசெய்த நடிகை மீனா!

Meena
By Sumathi Jan 07, 2024 08:35 AM GMT
Report

மீனா 2வது திருமணம் செய்யவிருப்பதாக செய்திகள் உலா வந்த வண்ணம் உள்ளது.

நடிகை மீனா 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார் நடிகை மீனா . 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

actress meena

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

2 மணி நேரத்திற்கு 13 லட்சம் வாங்கிய மீனா - உண்மை உடைத்த பிரபலம்!

2 மணி நேரத்திற்கு 13 லட்சம் வாங்கிய மீனா - உண்மை உடைத்த பிரபலம்!

2வது திருமணம் 

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் தலை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார்.

2வது திருமணம் குறித்து பரவும் செய்திகள் - உறுதிசெய்த நடிகை மீனா! | Actress Meena About Her 2Nd Marriage Rumour

இந்நிலையில், மீனா 2வது திருமணம் செய்யவிருப்பதாக வதந்திகள் வலம் வந்தன. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், எத்தனையோ பெண்கள் கணவரை இழந்தும் தனியாக வாழ முடியும் என்பதை நிரூபித்து காட்டி வருகிறார்கள்.

அதனால் நானும் இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் எனது மகள் நைனிகாவுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போதுமே எனது வாழ்வில் இன்னொரு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.