Sunday, May 11, 2025

அந்த இயக்குநரால் எல்லாம் நாசமா போச்சு - விஜய், அஜித் பட ஹீரோயின் குமுறல்!

Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath 10 months ago
Report

தனது சினிமா வாழ்க்கை குறித்து நடிகை மந்திரா பேசியுள்ளார். 

நடிகை மந்திரா

'பிரியம்' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மந்திரா. தொடர்ந்து அஜித்துடன் ரெட்டை ஜடை வயசு, விஜய்யுடன் லவ் டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கலாட்டா கல்யாணம், புது குடித்தனம், குபேரன், சிம்மாசனம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அந்த இயக்குநரால் எல்லாம் நாசமா போச்சு - விஜய், அஜித் பட ஹீரோயின் குமுறல்! | Actress Manthra Emotional Interview

ஆனால், அவரால் ஒரு முன்னணி நடிகையாக வளர முடியவில்லை. பின்னர் 2005-ம் ஆண்டு இயக்குநர் ஸ்ரீ முனியைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மந்திரா மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து அம்மா, அக்கா, மாமியார் என கிடைக்கும் சின்ன வாய்ப்பை தவறவிடாமல் நடித்து வருகிறார்.

அந்த ஹீரோ மாசம் ரூ.15000 அனுப்புறாரு; நான் கேட்டது கூட இல்ல - பாவா லட்சுமணன்!

அந்த ஹீரோ மாசம் ரூ.15000 அனுப்புறாரு; நான் கேட்டது கூட இல்ல - பாவா லட்சுமணன்!

முடிந்து விட்டது

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட மந்திரா "தமிழை விட தெலுங்கு திரையுலகில் அதிகமான படத்தில் நடித்திருக்கிறேன். 2003-ம் ஆண்டு மகேஷ் பாபு, ரவி தேஜா நடித்த நிஜம் படத்தில் நடித்திருந்தேன்.

அந்த இயக்குநரால் எல்லாம் நாசமா போச்சு - விஜய், அஜித் பட ஹீரோயின் குமுறல்! | Actress Manthra Emotional Interview

அந்த திரைப்படம் தான் என் இமேஜையும், கேரியரையும் நாசமாக்கியது. இயக்குநர் அந்த படத்தின் கதையை என்னிடம் வேறு மாதிரி கூறினார். ஆனால், படம் எடுக்கும் போது வேறு மாதிரி எடுத்து விட்டார்.

இதுகுறித்து நான் கேட்டேன். ஆனால், அட்வான்ஸ் வாங்கி விட்டதால் விருப்பமே இல்லாமல் நடித்தேன். அந்த படத்துடன் என் சினிமா கேரியரே முடிந்துவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.