ஸ்லிம் பியூட்டியான மஞ்சிமா மோகன் - சட்டென உடல் எடையை குறைத்தது இப்படிதானா?
குண்டாக இருந்த நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடையை குறைத்த தகவல் வெளியாகியுள்ளது.
மஞ்சிமா மோகன்
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் நுழைந்த மஞ்சிமா மோகன், பல மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் 2016-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தன. இவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்தியுடன் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கினர். பின்னர் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
எடையை குறைத்த நடிகை
இந்நிலையில், இவர் ஒல்லியாக அழகிய உடல் அமைப்புடன் இருந்தார், பின்னர் போக போக குண்டாக தொடங்கினானார். இதனால் இவரை பலரும் ட்ரோல் செய்து கிண்டல் செய்தனர். அனால் இவர் துணிச்சலாக விமர்சங்களுக்கும், ட்ரோல்களுக்கும், 'தன்னுடைய எடை எந்தவிதத்திலும் ஒரு குறையாக தான் பார்க்கவில்லை' என்று தக்க பதிலடி கொடுத்தார். இவரது திருமணத்தில் கூட இவர் ரொம்பவே குண்டாக தான் இருந்தார்.
தற்பொழுது திடீரென உடல் எடையை குறைத்துள்ளார். இதனை குறுகிய காலத்திலேயே ஒல்லியானதால் இது எப்படி செய்தீர்கள் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், Ariel Yoga முறையை பின்பற்றித்தான் இவர் உடல் எடையை குறைத்தார் என்று அனைவரும் பேசி வருகின்றனர். இவர் யோகா செய்வது மற்றும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.