ஹனிமூன் பிளான் - ஷாக் கொடுத்த மஞ்சிமா மோகன்...!
ஹனிமூன் பிளான் குறித்து வெளிப்படையாக நடிகை மஞ்சிமா மோகன் பேசிய தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் கவுதம் கார்த்திக்
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன்தான் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன்
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள நடிகையாவர். இவர் சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது இவருக்கும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் காதல் மலர்ந்தது.
திருமணம்
கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகனின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் ஜீவா, விக்ரம் பிரபு, ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹனிமூன் பிளான்
இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு தங்களது ஹனிமூன் பிளான் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், என் கணவர் கவுதம் கார்த்திக் தற்போது சிம்புவின் பத்து தல பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அதனால், ஹனிமூன் குறித்து தற்போது யோசிக்கவில்லை.
கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு விடுமுறையின் போது ஹனிமூன் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனைக் கேட்ட ரசிகர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள் என்று கூறி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil