அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை - சீனு ராமசாமி முகத்திரையை கிழித்த நடிகை!

Tamil Cinema Tamil Actress Actress Seenu Ramasamy Manisha Yadav
By Jiyath Nov 24, 2023 03:30 PM GMT
Report

இயக்குநர் சீனு ராமசாமிக்கு நடிகை மனிஷா யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். 

பாலியல் தொல்லை

சமீபத்தில் நடிகை மனிஷா யாதவுக்கு, இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை - சீனு ராமசாமி முகத்திரையை கிழித்த நடிகை! | Actress Manisha Yadav Slams Seenu Ramasamy

'இடம் பொருள் ஏவல்' படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை மனிஷா யாதவிடம் இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் ரீதியாக நடந்து கொண்டதாகவும், அதனால் அவர் சினிமாவே வேண்டாமென்று போய்விட்டதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீனு ராமசாமி வெளியிட்ட பதிவில் "தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை. மனிஷா ஒரு மேடையில் தனக்கு நன்றி கூறியுள்ளார்.

பாலியல் சர்ச்சை: அஜித், சூர்யா தான் மிஸ்டர் கிளீன்; அப்போ விஜய்..? - பிரபலம் பகீர்!

பாலியல் சர்ச்சை: அஜித், சூர்யா தான் மிஸ்டர் கிளீன்; அப்போ விஜய்..? - பிரபலம் பகீர்!

நடிகை மனிஷா பதிலடி

நான் அவரிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்டிருந்தால் அவர் எதற்காக எனக்கு நன்றி சொல்ல வேண்டும்" என வீடியோ ஒன்றையும் சீனு ராமசாமி பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்து நடிகை மனிஷா யாதவ் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாவது

அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை - சீனு ராமசாமி முகத்திரையை கிழித்த நடிகை! | Actress Manisha Yadav Slams Seenu Ramasamy

"ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னது போலத்தான் சீனு ராமசாமிக்கும் நன்றி சொன்னேன். மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் பற்றி நான் சொன்னதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தன்னை அநாகரிகமாக நடத்திய ஒருவருடன் எப்போதுமே இணைந்து பணியாற்ற மாட்டேன். சீனு ராமசாமி நீங்க சொல்கிறது தவறு" என மனிஷா யாதவ், சீனு ராமசாமியை விளாசியுள்ளார்.