அவரோட லிப் லாக் பண்ணவே மாட்டேன் - அடம்பிடித்த நடிகை மனிஷா!
முத்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என நடிகை மனிஷா மறுத்துள்ளார்.
நடிகை மனிஷா யாதவ்
2012 ஆம் ஆண்டு வெளியான 'வழக்கு எண் 18/9' திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார் நடிகை மனிஷா யாதவ். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பின்னர் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'ஆதலால் காதல் செய்வீர்' படம் மூலம் தனி ரசிகர்களை பிடித்துவிட்டார். மேலும், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பட்டய கெளப்பனும் பாண்டியா, ஒரு குப்பை கதை, பொட்டு, சண்டி முனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
முத்த காட்சி
தொடர்ந்து, பட வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். தற்போது, நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் பிரஜனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை ஆதிராஜன் என்பவர் இயக்கியுள்ளார்.

அதில், லிப் லாக் போஸுக்கு மறுத்துள்ளார். மேலும், பாடல் காட்சி ஒன்றிலும் ஸ்ட்ரிக்டாக மறுப்பு தெரிவித்து கன்னத்தில் முத்தமிட்டு நடித்துள்ளார்.
இதனால், டைரக்டருக்கும், மனிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் அரசாங்கத்திற்கு பெரும் சிக்கல்! பதவி விலகிய முக்கிய புள்ளி IBC Tamil
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை IBC Tamil