என்னை அந்தமாதிரி ஆடை அணியச் சொன்னார் பிரபல இயக்குநர் - மகாராஜா பட நடிகை

Tamil Cinema
By Sumathi Jun 15, 2024 05:30 PM GMT
Report

நடிகை மம்தா மோகன்தாஸ் தான் கடந்து வந்த பாதை குறித்து மனம் திறந்துள்ளார்.

நடிகை மம்தா மோகன்தாஸ்

மலையாள சினிமாவில் பிரபலமானவர் நடிகை மம்தா மோகன்தாஸ். 2021 -ல் விஷால் ஆர்யா நடித்த ‘எனிமி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

actress mamtha mohandas

பின்னர் பெரிதாக தமிழ் படங்களில் கமிட் ஆகவில்லை. தற்போது, மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டி ஒன்றில், 2007 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜமௌலி படத்தில் நடிக்கும் போது எனக்கு மிகவும் கிளாமரான ஆடைகளை கொடுத்து என்னை நடிக்கச் சொல்லி இருந்தார்.

அந்த ரிலேஷன்ஷிப் வொர்க் அவுட் ஆகல; இப்போ டேட்டிங் பண்றேன் - மம்தா ஓபன் டாக்!

அந்த ரிலேஷன்ஷிப் வொர்க் அவுட் ஆகல; இப்போ டேட்டிங் பண்றேன் - மம்தா ஓபன் டாக்!

ராஜமௌலி

மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த அந்த செட்டில் கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் இருந்தனர். ராஜமௌலி அப்படி கூறியது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

என்னை அந்தமாதிரி ஆடை அணியச் சொன்னார் பிரபல இயக்குநர் - மகாராஜா பட நடிகை | Actress Mamtha Mohandas About Rajamouli

சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு தெரியும்தான், ஆனால் நான் சினிமாவுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. ராஜமௌலி மிகவும் சீரியஸான இயக்குநர்.

சில நேரங்களில் நடிகர்கள் மீது அவர் கோபப்படவும் செய்வார். ராஜமௌலியிடம் நான் திட்டு வாங்கி இருக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.