பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை..என்ன காரணம்? அதிர்ச்சி சம்பவம்!
பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைகா அரோரா
பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா, மும்பையின் பந்த்ராவில் உள்ள வீட்டின் மொட்டையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக இரண்டு போலீசார் சென்றுள்ளனர். இதுவரை தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கண்டெடுக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தந்தை தற்கொலை
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், அனில் அரோரா தற்கொலை செய்து கொண்டபோது நடிகை மலைகா அரோரா வீடடில் இல்லை.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மலைகா குடும்பத்தினர் இரங்கல் தெரிவிக்க அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில், மலைகா அரோராவிற்கு 11 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் தனியாக பிரிந்தனர்.
அதன்பிறகு, அவரும், அவருடைய தங்கை அம்ரிதா ராவும் அவர்களுடைய தாயாரால் வளர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட ஆலோசனைகளை பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050.)