அதை எதிர்பார்க்கவே இல்லை; ஸ்ரீதேவி அக்கா இறந்தப்போ.. கலங்கிய நடிகை மகேஸ்வரி!
நடிகை ஸ்ரீதேவி குறித்து மகேஸ்வரி சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீதேவியின் உறவினரும், நடிகையுமான மகேஷ்வரி அவர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீதேவி அக்காக்கூட சித்தி, பாட்டி என்று கூட்டுக்குடும்பமாக இருந்தோம். அக்காவுக்கு ஒரே பொழுதுபோக்கு நாங்க தான் ஷூட்டிங் இல்லனா எங்களை கூட்டிக்கொண்டு வெளியில் சென்று விடுவார்.
மகேஸ்வரி வேதனை
அக்கா சென்னை வந்துவிட்டாலே ஸ்கூலுக்கு போக மாட்டோம் அவங்கக்கூடத்தான் எப்போதும் தானும், தம்பியும் இருப்போம். அதேபோல ஸ்ரீதேவி அக்கா இறந்து விட்டார்கள் என்பதை மனசு இன்னும் ஏற்றுக்கொள்ளவே இல்லை.
அவங்க எங்கோ வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், ஷூட்டிங்கில் இருக்கிறார்கள் என்று தான் மனசு சொல்லுகிறது. யாருமே எதிர்பார்க்கவே இல்லை இப்படி எங்களை விட்டு திடீர் என்று போய்விடுவார்கள் என்று நினைக்கவே இல்லை.
ஆனால், அவர்களின் ஆத்மா எங்களை சுற்றித்தான் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.