உங்களை மறுபடியும் ஏமாத்திட்டோம் - நடிகை மகாலட்சுமி கணவர் திடீர் பதிவு!
நடிகை மகாலட்சுமி தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
நடிகை மகாலட்சுமி
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
தொடர்ந்து, வார இறுதி நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் எடுக்கும் புகைப்படங்களையும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கிடையில், சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில், இருவரும் தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து ரவீந்திரன் பகிர்ந்துள்ள பதிவில், வெற்றிகரமாக நாங்கள் இரண்டாவது திருமண நாளை கொண்டாடுகிறோம். இன்னுமாடா நீங்க இன்னும் பிரியலனு கேக்கும் உங்களை மறுபடியும் ஏமாத்திட்டோம்.
திருமண நாள்
என்னோட நம்பிக்கை, வாழ்க்கையில் நம்ம நல்லா இருக்கணும்னு ஒரு கூட்டம் உங்கள் கிட்ட இருக்கும் வரை. அப்புறம் உங்க குடும்பம் உங்க கூட இருக்கிற வரைக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தான். எங்களை கிண்டல், உருவ கேலி, அப்புறம் அசிங்கப்படுத்துவதாலும் பயன் இல்லை.
மூன்று மாதம் தாங்குமா இவங்க கல்யாணம்னு கேட்டவங்களுக்கு என்னோட அன்பான பதில் மறக்காம எங்களுடைய போட்டோவுக்கு லைக் அண்ட் ஷேர் பண்ணிடுங்க. மகாலட்சுமி, என்ன சொல்ல உன்னைப் பற்றினு தெரியல. போன வருடம் பல பிரச்சனைகளும் திருப்பங்களும் தான் நம்முடைய வாழ்க்கையில் இருந்தது. எனக்கு வந்த வலி எல்லாவற்றையும் உன்னுடைய கைகளில் இறுக்கமாக நீ பிடித்துக் கொண்டாய்.
மக்களே உங்களுக்கு ஒரு பிரீ அட்வைஸ் கொடுக்கிறேன் வாழ்க்கையில புரிஞ்சவங்க ஒன்னு சேர்ந்து அவங்க புரிஞ்சி வாழ்றது ரொம்ப ஈசி. நீ உன்னோட வாழ்க்கையை வாழு. அதுவும் உன்னை நேசிப்பவர்களுக்காக வாழ் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.