திருமணமாகி 6 மாதம்; நல்ல செய்தியா - கொண்டாடிய மகாலட்சுமி ரவீந்தர்!
மகாலட்சுமி ரவீந்தர் திருமணமாகி 6வது மாதத்தை கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
6வது மாதம்
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது.
இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இந்நிலையில் தற்போது தங்களின் 6-வது மாத திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள்.
வைரல் ஃபோட்டோ
தற்போது ரவீந்தர் You & Me எனக்குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு, ”6வது மாத அனிவர்சரி, மகாலட்சுமி - வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் அன்பாகவும் மாற்றியவர். திருமதி ரவி - என் உலகம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதில், “ஹேப்பி அனிவர்சரி மை பேபி, மை எவ்ரிதிங்” என மகாலட்சுமி கமெண்ட் போட்டுள்ளார்