நள்ளிரவில் ரவீந்தர் செய்த காரியம்; அதிர்ந்து போன மகாலெட்சுமி - குவியும் கமெண்டுகள்!
மகாலட்சுமி பிறந்தநாளுக்கு நள்ளிரவில் ரவீந்தர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
மகாலட்சுமி பிறந்தநாள்
நடிகை, தொகுப்பாளினி என வலம் வந்த மகாலட்சுமி, திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை 2022ல் 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த ஜோடி விரைவில் பிரிந்து விடும், மகாலெட்சுமி பணத்திற்காக திருமணம் செய்துள்ளார் என பலரும் விமர்சித்து வந்தனர். ஆனால், 2 வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்போதிருந்து தொடர்ந்து இந்த ஜோடி ஹாட் டாப்பிக்கிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில், மகாலெட்சுமி பிறந்த நாளுக்கு நள்ளிரவில் கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ரவீந்தர்.

ரவீந்தர் சர்ப்ரைஸ்
மறுநாள் ஆதரவற்றவர்கள், முதியவர்களுக்கு VJ மகாலட்சுமியே நேரில் சென்று உணவு வழங்கி இருக்கிறார். அவர் தனக்கு கணவனாக கிடைத்ததற்கு நான் மிகவும் லக்கி என மகாலெட்சுமி குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகன் சச்சா தனக்கு டேஸ்டான கேக் வெட்டியதோடு அவருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இறுதியாக இந்த பிறந்தநாளன்று தான் உடல் உறுப்பு தானம் செய்திருப்பதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல் IBC Tamil