நடிகை மகாலட்சுமி திருமணம் உங்களுக்கு ஏன் எரிகிறது? - கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

Tamil Cinema Serials
By Thahir Sep 02, 2022 10:39 AM GMT
Report

சீரியல் நடிகை மகாலட்சுமி பணத்திற்காக தான் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற விமர்சனங்களுக்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

முதல் திருமணம் - விவாகரத்து 

நிகழ்ச்சி தொகுப்பளராக அறிமுகமானவர் மகாலட்சுமி. இவர் பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சீரியல்களில் நடித்து வந்தார்.

சன் டிவியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர் மகாலட்சுமி. இவர் ஆபிஸ், ஒரு கை ஒசை உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகை மகாலட்சுமி திருமணம் உங்களுக்கு ஏன் எரிகிறது? - கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் | Actress Mahalakshmi Got Married Netizens Criticism

சீரியல்களில் பிசியாக இருந்த வந்த மகாலட்சுமி அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு குழந்தை ஒன்று உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் முறைப்படி விவாகரத்து ஆன பின்பு தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இரண்டாம் திருமணம் - விமர்சனம்

மகாலட்சுமி இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரோடெக்சன் உரிமையாளர் ரவி. இவர் முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணம் போன்ற திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.

இவர் நேற்று சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பல விமர்சனங்கள் கிளம்பியது.

நடிகை மகாலட்சுமி திருமணம் உங்களுக்கு ஏன் எரிகிறது? - கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் | Actress Mahalakshmi Got Married Netizens Criticism

இவர் பணத்துக்காக ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நடிகை மகாலட்சுமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இது அவர்கள் வாழ்க்கை, அவர்கள் வாழப் போகிறார்கள். உங்களுக்கு ஏன் எரிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகை மகாலட்சுமி திருமணம் உங்களுக்கு ஏன் எரிகிறது? - கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் | Actress Mahalakshmi Got Married Netizens Criticism