என்னிடம் பிரபோஸ் செஞ்சது உண்மைதான்; ரஜினி நல்ல மனிதர் - நடிகை லதா ஓபன்டாக்!

Rajinikanth Latha Tamil Cinema
By Sumathi Sep 13, 2024 06:00 PM GMT
Report

தான் கடந்து வந்த சினிமா பயணம் குறித்த நடிகை லதா பல தகவல்கள் பகிர்ந்துள்ளார்.

 நடிகை லதா

70 மற்றும் 80களின் காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லதா. எம்ஜிஆர், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

rajinikanth - latha

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், எந்த நடிகருடனும் தன்னை இணைத்து கிசுகிசுக்கள் வெளியாகாத நிலையில் ரஜினியுடன் மட்டும் தன்னை இணைத்து இத்தகைய கிசுகிசுக்கள் வெளியானது.

மகளை திருமணம் செய்ய கேட்ட ஸ்ரீதேவி தாய் - மறுப்பு தெரிவித்த கமல்!

மகளை திருமணம் செய்ய கேட்ட ஸ்ரீதேவி தாய் - மறுப்பு தெரிவித்த கமல்!

ரஜினி சிறந்த மனிதர்

ரஜினி தனக்கு மிகப்பெரிய நண்பர். மிகச்சிறந்த மனிதர். மேலும், மலையாள நடிகர் ஜெயன் லவ் இன் சிங்கப்பூர் படத்தில் இணைந்து நடித்தபோது, தன்னை காதலிப்பதாக தன்னை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார்.

என்னிடம் பிரபோஸ் செஞ்சது உண்மைதான்; ரஜினி நல்ல மனிதர் - நடிகை லதா ஓபன்டாக்! | Actress Latha About Love Proposal And Rajini

இதுகுறித்து தான் யோசிப்பதற்கு முன்னதாகவே அவர் விபத்தில் மரணமடைந்தது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவுடன் தனக்கு மிகச்சிறப்பான பழக்கம் இருந்தது.

இருவரும் இணைந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்க செல்வோம் எனத் தெரிவித்துள்ளார்.