அப்போதுதான் அவரை லவ் பண்ணேன்;; ரகசியமா பேசுவேன், ஆனால்.. லட்சுமி மேனன் ஓபன் டாக்!
தனது காதல் அனுபவம் குறித்து நடிகை லட்சுமி மேனன் மனம் திறந்துள்ளார்.
லட்சுமி மேனன்
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன்(27).

தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அதன்பின் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார்.
அதனையடுத்து, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில், விஷாலுடன் இணைந்து, பாண்டிய நாடு, நான் சிவப்பு மனிதன் போன்ற படத்தில் நடித்திருந்தார். அதில் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
காதல் அனுபவம்
இந்நிலையில், அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னிடம் யாரும் காதலை வெளிப்படுத்தியது கிடையாது. ஆனால், நான் காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது. அவரிடம் நேரா போய் லவ் சொல்லிட்டேன்.. சில நாட்கள் கழித்து அவரும் ஒப்புக் கொண்டார்.

அதன் பிறகு இருவரும் அடிக்கடி பேசிக் கொள்வது, அடிக்கடி அவுட்டிங் சென்றது இதுபோல எதுவும் நடக்கவில்லை. அவர் அவருடைய படிப்பில் கவனமாக இருந்தார்.. நான் என்னுடைய படிப்பில் கவனமாக இருந்தேன்… நண்பர்கள் போலவே இருந்தோம்.. எப்போதாவது ஒருமுறைதான் பேசிக் கொள்வோம்.
பள்ளி காலம் முடியும் தருவாயில் தான் அடிக்கடி பேச தொடங்கினோம். தொலைபேசியில் பேச தொடங்கினோம். போர்வையை போற்றிக் கொண்டு அவருடன் நான் ரகசியமாக பேசுவேன். வீட்டில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டை சுற்றி சுற்றி வந்து தொலைபேசியில் பேசி இருக்கிறேன்.
ஆனால், பள்ளி முடிந்த பிறகு அந்த காதல் காணாமல் போய்விட்டது. நான் என்னுடைய துறையில் பிஸியாகிவிட்டேன். அவர் அவருடைய துறையில் பிஸியாகிவிட்டார். தற்பொழுது திருமணமும் செய்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
You May Like This Video
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan