விவாகரத்தான திருமண பந்தம் - பையன அண்ணனுக்கே தத்து கொடுத்திருப்பேன்..! எமோஷனலான கிருத்திகா
வில்லி நடிகைகளில் தமிழ் சின்னதிரையுலகில் ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்திருப்பவர் நடிகை கிருத்திகா.
நடிகை கிருத்திகா
சீரியல் நடிகைகள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து தொடர்ந்து பிரபலமாக இருந்து வருபவர் நடிகை கிருத்திகா. பிரபலமான ":மெட்டி ஒலி" தொடரில் அறிமுகமான இவர் நடன நிகழ்ச்சியான "மானாட மயிலாடா"விலும் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

தற்போது தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் கிருத்திகா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்வு குறித்து தகவல்களை தெரிவித்துள்ளார். அதில் மானாட மயிலாட நிகழ்ச்சி முடிந்த பிறகு, வீட்டாரின் வறுபுறுத்தலின் காரணமாக திருமணம் செய்துகொண்டதாக ஆனால், தற்போது மீண்டும் படங்களில் நடித்து துவங்கியிருப்பதாக தெரிவித்தார்.
பையன தத்து கொடுத்தேன்
தனது திருமணம் குறித்து பேசிய கிருத்திகா, விவாகரத்து முடிவை தான் தன்னிச்சையாக எடுக்கவில்லை என்று கூறி, ஆரம்பம் முதலே பிரச்சினைகள் பல இருந்த நிலையில். அனைவரும் பேசி இந்த விவாகரத்து முடிவிற்கு வந்தோம் என்றார்.
அப்போது மகன் குறித்து வருத்தப்பட போது, தன்னுடைய அண்ணன் தன்னுடைய மகனுக்கும் அப்பாவாக இருந்து வழிநடத்துவதாக தெரிவித்த கிருத்திகா, அப்பா இல்லையே என்று வருத்தப்படும் அளவிற்கு எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார். தொடர்ந்து, பேசிய அவர், தன்னுடைய மகன் ரோகிணி நட்சத்திரம் என்பதால் அப்பா, அம்மாவுடன் இருக்க மாட்டான் என்ற காரணத்தால்,

அண்ணனுக்கு தத்துக்கொடுக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தது என்றெல்லாம் கூறி, அந்த வகையில், தன் அண்ணனுக்கு இவனை தத்துக்கொடுத்து இருப்பேன் என்றும் கூறினார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil