அவரை பைத்தியமா லவ் பண்ணேன்; கல்யாணமும் ஆகல, வாழ்க்கையும் போச்சு - கலங்கிய நடிகை கிரண்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை கிரண் ரத்தோர் தனது காதல் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
கிரண் ரத்தோர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். ஜெமினி, அன்பே சிவம், வின்னர் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பின் கோவாவில் செட்டில் ஆனார்.
இதற்கிடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருந்தார். தற்போது, லியோ படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில்
காதல்
ஒருவரை பைத்தியமாக காதலித்ததாகவும், தான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைத்தேன். ஆனால், அந்த உறவு தோற்றுப்போய்விட்டதால், தான் மிகவும் துவண்டுப்போனேன். திரைத்துறையில் சில காலம் இல்லாமல் போனதற்கு, என் காதல் தோல்வியே காரணம்.
இதனால் தான் சினிமாவில் தன்னால் தொடரமுடியவில்லை. நான் அன்று சரியாக இருந்திருந்தால் கண்டிப்பாக நல்ல இடத்திற்கு சென்றிருப்பேன். முட்டாளாகி விட்டேன். தன் வாழ்க்கையே ஒரு தவறான முடிவால் தான் வீணாகிவிட்டது. தற்போது பட வாய்ப்பிற்கு ஆசைப்படுகிறேன். ஆனால் குறைவாக தான் வருகிறது என மனம் திறந்துள்ளார்.