எல்லாம் விஜய் படத்தில் செஞ்ச தப்பு; அதனால்தான் இப்படி, கெஞ்சியும் விடல.. நடிகை கிரண் வேதனை!
நடிகை கிரண் விஜய் பட பாடலுக்கு நடனமாடியது குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை கிரண்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். ஜெமினி, அன்பே சிவம், வின்னர் போன்ற பல படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன்பின் கோவாவில் செட்டில் ஆனார்.

இதற்கிடையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தக்கவைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கிரண் பேசுகையில், வின்னர் திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் கிரண் பிகினி உடை அணிந்து நடித்திருப்பார்.
திருமலை பாடல்
அது மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு பெற்றுவிட்டதால், அதற்குப் பிறகு அதிகமாக கிளாமர் வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அந்த மாதிரி தான் திருமலை வாய்ப்பு வந்தபோதும் சரி என்று டான்ஸ் ஆடுவதற்கு சம்மதம் தெரிவித்தேன். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த பாடலுக்கான காஸ்டியூம் கொடுத்ததும் எனக்கு ஒரே ஷாக் ஆகிவிட்டது.

அதற்கு காரணம் அந்த ட்ரெஸ் தொப்புள் தெரிகிற மாதிரி இருந்தது. உடனே, நான் இந்த டிரஸ்ஸை போட முடியாது என்று எத்தனையோ முறை சொன்னேன். ஆனால் அங்கிருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் நான் டான்ஸ் ஆடினேன் எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கிரண் நடனம் ஆடியிருந்த "மலையாள பகவதி... மலையாள பகவதி" பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil