பிரசாந்த் அப்படித்தான்; அவ்வளவு சீக்கிரம் விடமாட்டார் - நடிகை கிரண் ஓபன் டாக்
நடிகர் பிரசாந்த் குறித்து கிரண் பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.
நடிகை கிரண்
தமிழில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த்துடன் வின்னர் படங்களில் நடித்தார்.
பின் விஜய்யுடன் திருமலையில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதனையடுத்து படவாய்ப்பு எதுவும் இல்லாமல் ஆப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதித்துவருகிறார்.
நல்ல மனிதர்
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த் பற்றீ பேசியுள்ள கிரண், "பிரசாந்த் மிகச்சிறந்த மனிதர். ஒருமுறை அவரது நட்பு வட்டத்துக்குள் நாம் சென்றுவிட்டால் நம்மை அக்கறையோடு பார்த்துக்கொள்வார். விடவே மாட்டார்.
நாமே பேசாவிட்டாலும் அவரே நம்மை அழைத்து நலம் விசாரிப்பார். அவர் தமிழ் சினிமாவில் நல்ல மனிதர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் பிரசாந்த் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான GOAT படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்திருந்தார்.