அவன் என்மேல சாஞ்சு.. அந்த இடத்துலயே அடிச்சிட்டு ஓடிட்டான் - கீர்த்தி சுரேஷ் வேதனை!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீம ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளியிட்ட பல படங்களில் நடித்தார்.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'நடிகையர் திலகம்' படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் சாவித்ரியாக வாழ்ந்து அனைவரையும் ரசிக்க கவர்ந்தார் கீர்த்தி சுரேஷ்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான 'மாமன்னன்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.
பேட்டி
அவர் பேசியதாவது "கல்லூரியில் படிக்கும்போது, நானும் என் தோழியும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது குடிகாரன் ஒருவன் என் மேல சாஞ்சான். நான் அவனை அந்த இடத்திலேயே பளார் என்று அடித்துவிட்டு நடந்து வந்தேன்.
அப்போது திடீரென என் தலையில் வண்டி மோதி எனக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்தேன், ஒரு நிமிஷம் எதுவுமே புரியல. திரும்பி பார்த்தா அந்த குடிகாரன் என் தலையிலேயே பயங்கரமா அடிச்சிட்டு ஓடிட்டான்.
அப்பவும் நான் விடல, பின்னாடியே ஓடிப்போய் அவனை துரத்தி பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒரு நாள் உட்கார வைத்தேன். இந்த விஷயத்தை என்னால என்னைக்குமே மறக்க முடியாது" என்று நடிகை கீரத்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.