விஜய்-ரஜினி நல்லவர்களா? எல்லாரும் சிவகார்த்திகேயன் மாதிரிதான் - பிரபலம் பகீர்!
நடிகர் சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு வலைப்பேச்சு அந்தணன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன்- டி இமான்
நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டதாகவும், குழந்தைகள் நலனுக்காக அதை வெளியில் சொல்ல முடியாது என்றும் இசையமைப்பாளர் டி இமான் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இதனையடுத்து, தனது முதல் மனைவி மோனிகாவை, இமான் விவாகரத்து செய்ததிற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று இணையவாசிகளும், ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் சிவகார்த்திகேயனை விளாசி வந்தனர்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் உடனடியாக பேட்டியளித்த இமானின் முதல் மனைவி மோனிகா 'சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதன், நானும் இமானும் பிரியக்கூடாது என்றுதான் அவர் நினைத்தார்" என்று தெரிவித்தார். இப்படியாக இருந்த சிவகார்த்திகேயன்-இமான் சர்ச்சை தற்போது தான் சற்று ஓய்ந்துள்ளது.
அந்தணன் பேட்டி
இந்நிலையில் மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மீண்டும் சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர் பேசியதாவது "சினிமாவை சினிமாவாகப் பாருங்கள் என்று விஜய் சொல்வது அவருக்கே ஆபத்து.
இல்லையென்றால் விஜய்யை நமக்கு எப்படி தெரியும். விஜய்யை நல்லவர் என்கிறார்கள். ரஜினியை நல்லவர்கள் என்கிறார்கள். அவர்கள் நல்லவர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்.
சினிமாவில் அவர்கள் செய்வதை வைத்து நல்லவர் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் போய் பார்த்தால் பல பேர் சிவகார்த்திகேயனா தான் இருக்கிறார்கள்" என்று அவர் பேசியுள்ளார்.