அரசியல்வாதி மாப்பிள்ளை... கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா திருமண தகவல்கள் உண்மையா?

Hansika Motwani Keerthy Suresh Gossip Today Marriage
By Sumathi Aug 07, 2022 10:49 AM GMT
Report

நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா ஆகியோரின் திருமண தகவல்கள்தான் இணையத்தை கலக்கி வருகின்றன.

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரஜினியுடன் அண்ணாத்த, சாணிக் காயிதம், தெலுங்கில் மகேஷ் பாபுடன் சர்காரு வாரி பட்டா, குட்லக் சகி, மலையாளத்தில் மோகன்லாலுடன் மரக்காயர் தி அரபிக்கடலிண்டே சிங்கம் உள்ளிட்ட படங்கள் வெளியாகியிருந்தன.

அரசியல்வாதி மாப்பிள்ளை... கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா திருமண தகவல்கள் உண்மையா? | Actress Keerthy Suresh Hansika Wedding Rumours

இவருக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று அவ்வப்போது வதந்திகள் பரவுவது வழக்கமாக இருந்தது. சென்னையைச் சேர்ந்த முன்னணித் தொழிலதிபர் ஒருவருடன் கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் பரவியது.

அதற்கு உடனடியாக அவருடைய தரப்பிலிருந்து மறுப்பும் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் திருமண வதந்தி பரவி வருகிறது.

ஹன்சிகா

மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விஜயுடன் வேலாயுதம், சூர்யாவுக்கு ஜோடியாக சிங்கம் 2, சிம்புவுக்கு ஜோடியாக வாலு போன்ற படங்களில் நடித்தார். 

அரசியல்வாதி மாப்பிள்ளை... கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா திருமண தகவல்கள் உண்மையா? | Actress Keerthy Suresh Hansika Wedding Rumours

நடிகை ஹன்சிகா மீதும் அவ்வப்போது திருமண வதந்திகள் வருவதுண்டு. அண்மையில் அவரும் அரசியல்வாதி மகன் ஒருவரை விரைவில் மணக்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதனை ஹன்சிகா தரப்பு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை அனுஷ்கா, திரிஷா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட முன்னனி நடிகைகள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில், அவர்களின் திருமணம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளதால் வதந்திகளுக்கும் குறையில்லை.