கீர்த்தி சுரேஷ் திருமணம், மன உளைச்சலில் உள்ளோம் - மனம் திறந்த நடிகையின் தந்தை!
நடிகை கீர்த்தி சுரேஷுன் திருமணம் குறித்து அவரது தந்தை விளக்கமளித்துள்ளார்.
பிரபல நடிகை
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல இயக்குநர்கள் விரும்பினர்.
அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் டாப் நடிகர்கள் பலருடன் இனைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
விளக்கம்
இந்நிலையில், திருமணம் குறித்து பல வதந்திகள் வந்தது, இது குறித்து இவரின் தந்தை சுரேஷ், "கீர்த்தியும், ஃபர்ஹானும் நல்ல நண்பர்கள்.
அவர் எங்கள் குடும்பத்திற்கு சிறந்த நண்பராக இருக்கிறார். நாங்கள் வளைகுடா நாடுகளில் பயணம் செய்யும்போது பலமுறை எங்களுடன் வந்திருக்கிறார்.
அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் என்று பரவும் செய்திகள் எங்கள் இரண்டு குடும்பத்தையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது.
எங்களை அது ரொம்பவே பாதித்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.