Monday, Apr 14, 2025

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் - சினிமாவுக்கு குட் பை...மாப்பிள்ளை யார் தெரியுமா?

Keerthy Suresh Tamil Cinema Anirudh Ravichander Marriage
By Thahir 2 years ago
Report
255 Shares

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷிற்கு திருமணம்?

நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கீர்த்தி சுரேஷிற்கும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வந்ததாக தகவல்கள் பரவிய நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

married-to-actress-keerthy-suresh

இதுகுறித்து இருவரும் எந்த பதிலும் கொடுக்கவில்லை. கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்தான தகவல்கள் அவப்போது பரவி வருகிறது.

இந்தநிலையில், கீர்த்தி சுரேஷின் பெற்றோர்கள் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும்,

வதந்தியா? 

திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

married-to-actress-keerthy-suresh

இத்தகவல் உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதை கீர்த்தி சுரேஷ் சொன்னால் தான் தெரியவரும். இதைப்போல கடந்த ஆண்டு அவருக்கு திருமணம் என ஒரு தகவல் பரவியது.

அதற்கு எனது திருமணம் நடக்க இன்னும் சில காலங்கள் உள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.