நீ நடிச்சா படம் ஃபிளாப் தான், ராசியில்லாத நடிகை-னு சொன்னாங்க - வேதனையை பகிர்ந்த கீர்த்தி!
நடிகை கீர்த்தி தனது கசப்பான அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல இயக்குநர்கள் விரும்பினர்.
அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடம் சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் டாப் நடிகர்கள் பலருடன் இனைந்து நடித்துள்ளார். தொடர்ந்து நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் படத்தில் நடிக்கும்போது அவருக்கு நடந்த அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "ஆரம்பத்தில் தன்னை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்திட்டாங்க, நான் நடித்தால் அந்த படம் பாதியிலேயே நின்றுவிடும் என்றும் சொன்னார்கள். கடினமாக உழைத்து தான் இதை எல்லாம் தாண்டி வந்திருக்கிறேன்" என்று கூறி தனது வேதனையை பகிர்ந்துள்ளார்.