இவர் தான் காதலனா? - ஆண் ஒருவருடன் நெருக்கம் காட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
கீர்த்தி சுரேஷை பின் தொடரும் கிசு கிசு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் இவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி பருவத்தில் இருக்கும் ஒருவரை காதலித்து வருவதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் இன்னும் சில ஆண்டுகளில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் உலா வந்தன.
இது குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. கீர்த்தி சுரேஷ் திருமணம் மற்றும் காதல் குறித்தான கிசு கிசு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆண் ஒருவருடன் நெருக்கம்
இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் ஆண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த அவரது ரசிகர்கள் இவர் தான் கீர்த்தி சுரேஷின் காதலனா? என கேள்வி எழுப்பி வந்த நிலையில் அவர் காதலன் இல்லை என்பது அவர் கீர்த்தி சுரேஷின் நண்பர் என்பதும் தெரியவந்துள்ளது.